நிவின் பாலி நடிக்கும்’வர்ஷங்களுக்கு சேஷம்’
நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது. இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிவின் பாலியின் தனித்துவமான நடிப்பு.. கவனத்தை கவர்கிறது. ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் அவரது திரை தோற்றம்… அவர் ஆற்றல்மிக்க நடிகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் மட்டுமல்லாமல் இத்திரைப்படம்.. சினிமா ரசிகர்களின் ரசனையை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. இந்தத் திரைப்படம், 70 கள் மற்றும் 80களில் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்வியலை பற்றியதாகும். சினிமா ரசிகர்களின் மையமாக திகழும் கோடம்பாக்கம்.. பல திரைப்பட தயாரிப்பாளர்களின் வெற்றியையும், புகழையும், தோல்விகளையும் கண்டது. இந்த நகரம்தான் படத்தின் கதைக்கள பின்னணி.
நிவின் பாலியின் அட்டகாசமான நடிப்புக்கு கூடுதலாக ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ வலிமையான மற்றும் அழுத்தமான கதைகளத்தையும், திறமையான சக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் ஒரு ஹைடெக்கான சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம்.. ரசிகர்களிடத்தில் நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்.