தமிழ்சினிமாவின் வர்த்தகம் விபச்சாரம் அளவுக்கு செல்கிறது! – பார்த்திபன் காட்டம்
எந்த நேரத்தில் படத்துக்கு ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று டைட்டில் வைத்தாரோ? அந்தப் படத்துக்கு தியேட்டர்களை நிரப்ப முடியாமல் திண்டாடி வருகிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.
தமிழ் சினிமாக்களில் வித்தியாசத்துக்கே வித்தியாசம் காட்டும் இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் இயக்கத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் பொங்கல் வெளியீடாக வருகிற ஜனவரி 4-ம் தேதி வெளிவருகிறது.
இதையொட்டி தற்போதைய தமிழ் சினிமாவின் வர்த்தகம் எப்படி இருக்கிறது? ஒரே மாதத்தில் 40 படங்கள் வெளிவருகிறது. இது நல்லதா? என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் அவர் “தமிழ்சினிமாவின் வர்த்தக நிலைமை விபச்சாரம் அளவுக்கு கூட செல்கிறது.
சின்ன பட்ஜெட் படத்தை ரிலீஸ் செய்வது மிக கடினமாக உள்ளது, நம்மிடம் வர்த்தகம் சரியில்லை இதற்காக நான் பல தடவை குரல் கொடுத்துள்ளேன்.
பெரிய படங்களுக்கு 500 திரையரங்குகள் கிடைக்கிறது.
ஆனால் நல்ல படத்தை எடுப்பவர்களுக்கு 50 திரையரங்குகள் கூட கிடைக்கிறதில்லை. இந்நிலைமை மாறும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அவரின் இந்த காட்டமான கருத்துக்கு காரணமே அவருடைய கோடிட்ட இடங்களை நிரப்புக படம் சந்தித்திருக்கும் தியேட்டர் சிக்கல் தான். ஏற்கனவே 12, 13 என தேதிகளை மாற்றி வந்த பார்த்திபன் இப்போது 14ம் தேதி ரிலீசை தள்ளி வைத்திருக்கிறார். அப்படியிருந்தும் எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்காத வெறுப்பின் காரணமாகவே இப்படி ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார் பார்த்திபன்.
ரிலீஸ் பண்றதுலேயும் ஏதாவது புதுமை பண்ணுங்க ஜி…