‘தீபாவளி, பொங்கலுக்கு அஜித், விஜய் படங்கள் வேண்டாம்!’ : பார்த்திபன் போடும் புதுக்கணக்கு

Get real time updates directly on you device, subscribe now.

parthiban

யசாகும் வரையிலும் போராடுவது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.

என்னதான் குடும்பப் பிண்ணனி பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர்களால் கோலோச்ச முடிகிறது.

இப்போதும் தனக்கான இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் வாரிசு நடிகர்கள் தமிழ்சினிமாவில் உலாவிக் கொண்டிக்கிறார்கள். அப்பா கே.பாக்யராஜை இந்தியத் திரையுலகமே திரைக்கதை மன்னன் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறது. அவரது வாரிசான சாந்தனுவோ இன்னும் தனக்கான இடத்தை இட்டு நிரப்புவதற்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

நல்ல திறமைசாலி என்பதற்கு சாந்தனுவுக்கு பட படங்கள் வந்தாலும் கண்டிப்பாக இந்தப்படத்துக்குப் பிறகு சாந்தனுவுக்கு மிகப்பெரிய ஃலைப் சினிமாவில் இருக்கிறது என்று சொல்லும்படியாக தயாராகியிருக்கிறதாம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் அடுத்த படமிது. தனது குருநாதர் மகனுக்கு தன்னால் முடிந்த ஒரு சிறு உதவி என்று கூட சொல்லலாம் என்றவாரே பேச ஆரம்பித்தார்…

Related Posts
1 of 2

ரசிகர்கள் ரசனை இப்படித்தான் இருக்கும்னு நாம நெனைச்சா அது தப்புன்னு என்னை உணர வெச்சது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தோட வெற்றி தான். நான் பயந்துக்கிட்டே கொடுத்த அந்தப்படத்தை ரசிகர்கள் புதுசா இருக்கேன்னு ஏத்துக்கிட்டாங்க. அந்தப்படத்தோட வெற்றி கொடுத்த தைரியத்துல தான் இந்த கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை எடுத்திருக்கேன். இங்க நான் ஓப்பனா பேசுறேன், இந்தப்படத்தோட கதைக்கு சாந்தனுவைப் போடக்காரணம் அவரும் ஒரு வெற்றிக்காக காத்துக்கிட்டு இருக்கார், அதோடு என்னோட குருநாதரோட பையனுக்கு என்னால செய்ய முடிஞ்ச உதவின்னு கூட இதை எடுத்துக்கலாம். கண்டிப்பா இந்தப்படம் சாந்தனுவை அடுத்த லெவலுக்கு கூட்டிப்போகும்.

உதட்டுக்கு நடுவுல கோடிட்ட இடங்களை நிரப்புகன்னு போட்ட உடனே உது ஏ சர்ட்டிபிகேட் படம்னு நெனைச்சிராதீங்க. இது முழுக்க முழுக்க ஒரு யு சர்ட்டிபிகேட் வாங்கக்கூடிய படம், படத்துல சில தவறான மனிதர்களை கேரக்டர்களா காட்டியிருக்கேன். அதுக்காகத்தான் அப்படி ஒரு டிசைன் பண்ணினேன்.

அப்புறம் இன்னொரு விஷயத்தை நான் சொல்லியே ஆகணும். ரஜினி, கமல், அஜித், விஜய்ன்னு பெரிய ஹீரோக்கள் படங்களை காலங்காலமாக தீபாவளி, பொங்கல்ன்னு பண்டிகை நாட்கள்லேயே ரிலீஸ் பண்ணனும்னு ஒரு இல்லாத விதியை தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் உருவாக்கி வெச்சிருக்காங்க. அது தேவையில்லாதது. அப்படி வர்ற படங்கள்னால நெறைய சின்னப் படங்கள் ரிலீஸ் நேரத்துல பாதிப்பை சந்திக்குது.

அதுக்குப் பதிலா இந்த மாதிரி பண்டிகை நாட்கள்ல சின்னப் படங்கள் ரிலீஸ் ஆகிற மாதிரி நெலைமை மாறிச்சின்னா ரொம்ப நல்லா இருக்கும். ஏன்னா பெரிய ஹீரோக்கள் படங்கள் வெள்ளிக்கிழமை இல்லை செவ்வாய்க்கிழமை ரிலீஸ் ஆனால் கூட அதை நான் போய்ப் பார்ப்பேன். அவங்க படம் ரிலீஸ் ஆகிற நாளே ஒரு பண்டிகை மாதிரி தான். அப்படி இருக்கும் போது பண்டிகை நாட்களை சின்னப் படங்களுக்கு விட்டுக் கொடுத்தா சினிமா இன்னும் சிறப்பா இருக்கும். என்று புதுக்கணக்கு போடுகிறார் பார்த்திபன்.

கூட்டிக்கழிச்சுப் பார்த்தா கணக்கு கரெக்ட்டா தான் இருக்கும்! ஆனா அதை மாஸ் ஹீரோக்கள் யோசிக்கணுமே..?