பாபா ப்ளாக்‌ஷீப்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

“சூசைட் பண்றது தப்பு..துணையா இருக்கு நட்பு” என்ற தம்மா துண்டு லைனை வைத்துக்கொண்டு படமெங்கும் ஷார்ட்ஸ் வீடியோ போல எடுத்து வைத்துள்ளார் இயக்குநர்

சேலம் மாவட்டம் தனியார் பள்ளியில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குள் நடக்கும் கடைசி பெஞ்ச் மோதலும், அதில் வரும் குட்டி குட்டி எமோஷ்னலும் தான் படத்தின் கதை. ஹலோ.. இந்தக் கதையில் விருமாண்டி அபிராமியும் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு கதையும் இருக்கு! அட ஆமால்ல!

படத்தில் யூட்யூபர்ஸே நிறைய பேர் நடித்துள்ளதால் அவர்களின் நடிப்பு பாடிலாங்லேஜ் எல்லாம் யூட்யூப் வீடியோக்களையே நினைவூட்டி சலிப்பூட்டுகின்றன. சிறிய போர்ஷனில் வந்தாலும் அபிராமி ஒரளவு ஸ்கோர் செய்கிறார். அம்மு அபிராமியும் ஓகே ரகம். ஆர்.ஜே விக்னேஷ் மிகச்சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்.

பாடல்கள் பின்னணி இசை இரண்டும் நன்றாக கவனிக்க வைக்கிறது. ஒளிப்பதிவும் ஓகே ரகமே! எடிட்டர் பார்த்துப் பார்த்து எடிட் செய்திருந்தாலும் இன்னும் வேஸ்ட் புட்டேஜ் இருக்கிறது பாஸு.

சிறிய நாட்-ஐ வைத்து நாட் அவுட் ஆகாமல் ஆட முடியும் நல்ல திரைக்கதையின் துணையிருந்தால். இயக்குநர் ராஜ்மோகன் சிரிப்பு காட்சிகளுக்கு காட்டிய ஆர்வத்தை சிறப்பான திரைக்கதைக்கு காட்டவில்லை என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. ஆழமாகவும் பதியாமல் ஜாலியாகவும் இல்லாமல் பாபா தள்ளாடுகிறார்.

#BabaBlackSheep #பாபாப்ளாக்‌ஷீப்