பிரபாஸ்-ஹோம்பாலே கூட்டணி மாஸ் அப்டேட்!
திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, இதுவரையிலான திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இது பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே இருவருக்கும் மிக முக்கியமான மைல்கல் அத்தியாயமாகும்.
ஹோம்பாலே பிலிம்ஸ், பல முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில், பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இது இந்திய பார்வையாளர்களுக்கு உயர்தர சினிமா அனுபவத்தை வழங்குவதற்கான ஹோம்பாலேவின் இடைவிடாத முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பலதரப்பட்ட ஜானர்களில், கலாச்சார ரீதியாக எதிரொலிக்கும் கதைக்கருக்களுடன் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை தந்து வரும் தொலைநோக்கு தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பாலே வளர்ந்து வருகிறது. KGF பார்ட் 1, KGF பார்ட் 2, காந்தாரா, சாலார் 1 ஆகியவற்றின் உலகளாவிய வெற்றியைத் தொடர்ந்து, ஹோம்பாலே ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைப்பட வரிசையை உருவாக்கியுள்ளது. இதில் இப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா 2 மற்றும் KGF பார்ட் 3 மற்றும் பிரபாஸுடனான அதன் புதிய முயற்சிகளும் அடங்கும்.