நடிகர் சசிகுமாரரின் அடுத்த படம்!

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 5

நடிகர் சசிகுமார், குடும்பத்தோடு கொண்டாடும், கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார். சிறந்த பொழுதுபோக்கை தரும் இந்த வகை திரைப்படங்கள், எப்போதும் வர்த்தக வட்டாரங்களிலும் லாபத்தை பெற்று தந்துவிடுகிறது. இயற்கையாகவே, சசிகுமார் இத்தகைய கிராமப்புற கதைகளின் வெற்றி முகத்துக்கு சொந்தக்காரராக மாறிவிட்டார். அத்தகைய படங்களின் வாயிலாக, பல இயக்குநர்களின் வெற்றிப்பயணத்திற்கு ஒரு படிக்கட்டாகவும் அவர் இருந்துள்ளார். ஒரு இயக்குநரின் கதையையும், அவரது திறனையும் மதிப்பிடுவதில் அவர் கில்லாடியாக இருப்பது, தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. SKLS Galaxy Mall Productions E. மோகன் தயாரிப்பில்
நடிகர் சசிகுமார் நடிக்கும் அடுத்த படமான “புரடக்‌சன் நம்பர்.2” படத்தை இயக்கும் இயக்குநர் தங்கம் பா சரவணன் இந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்துள்ளார்.