கல்லூரி விடுதிகளின் மறுபக்கத்தை பிடித்துக் காட்டும் பாலாவின் சிஷ்யர்!

Get real time updates directly on you device, subscribe now.

பாலா அடுத்த படத்தை எப்போது ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது சிஷ்யர்களில் ஒருவரான நந்தன் சுப்பராயன் ஒரு படத்தை இயக்கி ரிலீசுக்கும் தயாராகி விட்டார்.

”மயூரன்” என்ற தலைப்போடு தயாராகியிருக்கும் இப்படத்தில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா மற்றும் பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்திருக்கும் குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது கூடுதல் ஸ்பெஷல்.

அதென்ன மயூரன்? என்று கேட்டால் விரைந்து ”உன்னை காக்க வருபவன்”, ”வெற்றி புனைபவன்” என்று பொருள். கல்லூரி விடுதி தான் இப்படத்தின் கதைக்களம்.

Related Posts
1 of 134

என்னால் எதுவும் செய்ய முடியும் என எழுச்சியூட்டும் பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம். ஒரு தேசம். அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். ஒன்று மரம், ஒன்று செடி, ஒன்று கூடி. ஒரே நிலத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய் பழகும் நட்பையும் உருவாக்குகிறது, எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும், பகையும் வளர்க்கிறது.

என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லும் படம் தான் இந்தப்படம்” என்றார்.

வருகிற ஆகஸ்ட் 2 ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.