செந்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ள படம்

Get real time updates directly on you device, subscribe now.

உரியடி மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் பன்னிக்குட்டி, கடைசி விவசாயி, சத்திய சோதனை, தர்புகா சிவா இயக்கும் முதல் நீ முடிவும் நீ போன்ற படங்களின் தயாரிப்பாளர் சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம் அடுத்ததாக சுரேஷ் சங்கையா இயக்கும் அவரது மூன்றாவது படத்தை தயாரிக்கிறார். சுரேஷ் சங்கையா “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் ப்ரேம் ஜி அமரன் நடிப்பில் வெளியாக இருக்கும் “சத்திய சோதனை” படத்தின் இயக்குனர். தற்போது அவர் இயக்கும் இந்த புதிய படம், ஒரு சமூக பிரச்சினை பற்றி பேச கூடிய படம். தூத்துக்குடி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது அவர் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்திம் ஆகும்.