டப்பிங்கைத் துவங்கிய கபடதாரி

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று (மே
11) ‘கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, ’கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள்
பாதுகாப்பு அம்சங்களுடன், இன்று தொடங்கியது. இப்படத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். விரைவில் படத்தின் அனைத்து பின்னணி வேலைகளும் நிறைவுப்பெற்று
படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related Posts
1 of 5

ஹேமந்த் ராவ் இப்படத்தின் கதை எழுத, ஜான் மகேந்திரன் மற்றும் ஜி.தனஞ்செயன் இருவரும் இணைந்து
திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ்
மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.