வைபவ்-அதுல்யா ரவி நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

BTG UNIVERSAL நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை விக்ரம் ராஜேஸ்வர் – அருண் கேசவ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். கதாநாயகனாக வைபவ் நடிக்க, கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, பி.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

Related Posts
1 of 2

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சுரேஷ் A பிரசாத் கவனிக்க கலையை அருண் சங்கர் துரையும் சண்டை பயிற்சியை டான் அசோக்கும் மேற்கொள்கின்றனர்.