‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும்’சூர்யாவின் சனிக்கிழமை’!

Get real time updates directly on you device, subscribe now.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ எனும் திரைப்படம் இன்று பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தயாரிப்பாளர் டி வி வி தனய்யா படத்தின் திரைக்கதையை இயக்குநரிடம் ஒப்படைத்தார்.‌ முதல் ஷாட்டிற்கு தில் ராஜு கேமராவை சுவிட்ச் ஆன் செய்து தொடங்கி வைக்க, இயக்குநர் வி. வி. விநாயக் கிளாப் போர்டு அடிக்க, எஸ். ஜே. சூர்யா இயக்கினார்.

Related Posts
1 of 7

ஒரு பிரத்யேக ஜானரிலான கதைகளில் மட்டும் நடிப்பதில் நானி தன்னைப் பொருத்திக் கொள்ளவில்லை. கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப அவரும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தில் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் நடிக்கிறார்.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன், பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, கார்த்திகா ஸ்ரீனிவாஸ் பட தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.’சூர்யாவின் சனிக்கிழமை’ என்பது பான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.