பத்துதல- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

வெறும் கெத்தை மட்டுமே நம்பி ரசிகனை சுத்தலில் விட்டிருக்கிறது இந்த பத்துதல

படத்தின் ஓபனிங் காட்சியில் முதலமைச்சர் கடத்தப்படுகிறார். அவரைக் கடத்தியது யார்? கன்னியாகுமரியில் பெரும் தலயாக இருக்கிறார் சிம்பு. அவரிடம் வந்து சேர்கிறார் கெளதம் கார்த்திக். அவருக்கு சிம்புவிடம் ஆகிய வேண்டிய காரியம் என்ன? கன்னியாகுமரியில் தாசில்தாரர் ஆக இருக்கும் ப்ரியா பவானி சங்கருக்கு என்ன வேலை படத்தில்? இப்படியான கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிப்பதாக விரியும் திரைக்கதை பல்லிளிக்கிறது

தொட்டிஜெயா படத்திற்குப் பிறகு செட்டில்ட் ஆன கேரக்டரில் நடித்துள்ளார் சிம்பு. ஆனாலும் அவருக்கு கொடுக்கப்படும் பில்டப் ஓவர் டோஸ். கெளதம் கார்த்திக்கு நல்ல ஸ்பேஸ் படத்தில். சரியாகப் பயன்படுத்தியுள்ளார். ப்ரியா பவானி சங்கர் கேரக்டர் படத்தில் பெரிதாக எடுபடவில்லை. கெளதம் மேனென் ஓரளவு தன் கேரக்டரை காப்பாற்றியுள்ளார்.

ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை பாடல்கள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. கேமராமேன் மட்டும் தன்னால் ஆன திறமைகளை எல்லாம் கொட்டியிருக்கிறார். சிஜி ஏரியா செம்ம வீக்

அரசியல் கதையா? நட்புக்கதையா? தாதாக் கதையா? என எந்த முடிவுக்கும் வர முடியாமல் நம்மை குழப்பியடிக்கிறது திரைக்கதை. ஈர்ப்பான காட்சிகள், உயிர்ப்பான வசனங்கள் என ஒன்றுமில்லை படத்தில்.. இத்தனை ஆர்டிஸ்ட்..நிறைய பிரமாண்டமான செட்டப் கிடைத்தும் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா

பத்து தல- பத்தல தல
2/5