புதிய டப்பிங் நிறுவனம் துவங்கினார் நடிகர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ்!
‘கடாரம் கொண்டான்’ படத்தில் சியான் விக்ரமுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ். தற்போது விகாஸ் ஸ்ரீவஸ்தவ் டப்பிங் கம்பெனி என்கிற பெயரில் சொந்தமாக டப்பிங் கம்பெனி துவங்கியுள்ளார்.
தனது இந்த புதிய துணிச்சலான முயற்சி குறித்து அவர் கூறும்போது, “கடந்த 22 வருடங்களாக ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் ஆகியவற்றில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். மணிரத்னம் சார், கமல்ஹாசன் சார், சியான் விக்ரம் சார், ஆமிர்கான் சார் அல்லது அவதார் & டோன்ட் பிரீத் புகழ் ஹாலிவுட் நடிகர் ஸ்டீபன் லேங் என இவர்கள் அனைவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.
சினிமா என் நரம்புகளில் ரத்தமாக ஓடுகிறது. நான் விரும்பியபடி எனக்கு கதாபாத்திரங்களோ வேலையோ கிடைக்காதபோது நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அதனால்தான் விகாஸ் ஸ்ரீவஸ்தவ் பிலிம்ஸ் டப்பிங் நிறுவனத்தை 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். ‘தி காந்தி மர்டர்’ என்ற ஹாலிவுட் படத்தின் முழு டப்பிங் பணிகளையும் நான் தான் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து கொடுத்தேன்.