நடிகை பாவனாவை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி! : : டிரைவர் உடந்தை; அதிர்ச்சித் தகவல் அம்பலம்

Get real time updates directly on you device, subscribe now.

மிழில் மிஸ்கின் இயக்கத்தில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகர் பாவனா. தீபாவளி, ஏகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு இல்லாததால் தற்போது மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கேரளாவில் நேற்று இரவு ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு காரில் எர்ணாகுளம் திரும்பும் போது மூன்று பேர்கள் கொண்ட ஒரு கும்பல் அவர் வந்த கார் மீது தங்கள் காரை மோத விட்டு விபத்து நடந்தது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி பாவனாவை கற்பழிக்க முயற்சி செய்திருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது அந்த மூன்று நபர்கள் பாவனாவின் காருக்குள் புகுந்து கொண்டு, காரை ஓட்டிச் சென்றவாறே பாவனா மீது தாக்குதல் நடத்தியதோடு அவரை பாலியல் ரீதியிலாகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள்.

அந்த கார் எர்ணாகுளத்திலிருந்து பாலாரி வட்டம் என்ற ஊரை சென்றடையும் வரை இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவங்களை எல்லாவற்றையும் காருக்குள் புகுந்த மூன்று நபர்களில் ஒருவர் வீடியோவில் படம் பிடித்திருக்கிறார். அதன் பிறகு அந்த மூன்று நபர்களும் தப்பி ஓடி விட்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்க, பாவனாவிடமும், பாவனாவின் கார் டிரைவரிடமும் போலீஸ் விசாரனை நடத்தியபோது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பாவனாவின் முன்னால் கார் டிரைவர் என்கிற அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியிருக்கிறது. சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் இப்போது போலீஸ் தேடி வருகிறார்களாம்.

கேரளாவில் நேற்று இரவில் நடந்த இந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.