கணக்கு போட்டார் பாவனா! : கவிழ்ந்தார் கன்னட தயாரிப்பாளர்!

அள்ளிக்கொஞ்சுகிற அளவுக்கு அழகை கொட்டி வைத்திருந்தாலும் இன்றுவரை பாவனாவால் தமிழில் முன்னணி நடிகையாக வரவே முடியவில்லை.
ஜெயம் ரவி, அஜித் என தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டும் கூட அவர்களே தோல்வி பயத்தில் கொஞ்சம் ”ஷேக்” ஆனது தான் மிச்சம்.
அந்தளவுக்கு பாவனா நடிக்கின்ற எல்லா படங்களும் அட்டர் ப்ளாப் ஆக ‘ராசியில்லாத நடிகை’யாக முத்திரை குத்தப்பட்டார். இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாதவர் மீண்டும் தனது தாய்மொழியான மலையாளத்திலும், அவ்வப்போது கன்னடப் படங்களிலும் நடித்து வந்தார்.
இருந்தாலும் இளமை இருக்கும் வரை தானே நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று யோசித்தவர் கன்னடத்தில் ரோமியோ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அப்படத்தின் பசையுள்ள தயாரிப்பாளரான நவீனின் காதல் வலையில் விழுந்து விட்டார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பே பாவனாவின் இந்த ரகசியக் காதல் குறித்து அரசல் புரசலாக தகவல்கள் வெளியானாலும் அதையெல்லாம் வழக்கம் போல அது காதல் இல்லை, வெறும் நட்பு தான் என்று மறுத்து வந்தார்.
இந்த நிலையில் அந்தச் செய்தியை உண்மையாக்கும் விதமாக தான் காதலித்து வந்த தயாரிப்பாளரையே விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் பாவனா.