பள்ளிக்குச் சென்ற சகோதரரின் 17 வயது மகளை காணவில்லை! : நடிகை லலிதகுமாரி கண்ணீர்

Get real time updates directly on you device, subscribe now.

lalitha-kumari

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும்,நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரன் சினிமா உதவி இயக்குனர் அருண் மொழி வர்மன் -செரில் தம்பதி.

இந்த தம்பதியின் மூத்த மகள் 17 வயதான அப்ரீனா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பனிரெண்டாம் (+2) வகுப்பு படிக்கிறார். கடந்த 6ஆம் தேதி முதல் காணாமல் போய் இன்றோடு 5 நாட்கள் ஆகின்றது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். பேரில் அவர்கள் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்கள் ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றி விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆனால் எங்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. காவல் துறைக்கும் போதிய ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை. பள்ளி மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது. இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஊடகங்கள் மூலம் என் அண்ணன் மகள் அப்ரினா கிடைப்பால் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்று கண்ணீர் விட்டார் லலித குமாரி.