அஜித்- விஜய் சீனுக்காக அறை வாங்கினாரா இயக்குனர் சாமி? : ‘கங்காரு’வில் நடந்த களேபரம்!
எப்படியாவது விஜய்யிடம் கதை சொல்ல வேண்டும் என்கிற ஆசையில் இருந்திருக்கிறார் மாமனாரின் இன்பவெறி ரேஞ்சில் ‘சிந்து சமவெளி’யை எடுத்த இயக்குனரான சாமி. அதற்காக களத்தில் இறங்கி பல முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.
வந்த ரிசல்ட் என்னவோ நெகட்டீவ் தான். இதே போல நடிகர் அஜித்திடமும் கதை சொல்லி கால்ஷீட் வாங்க முயற்சித்திருக்கிறார். இரண்டு நடிகர்களில் அதிகம் அலைந்து ஏமாந்தது விஜய்யிடம் தானாம்.
இந்தக் கடுப்பை பல வருடங்களாக தனது மூளையில் ஊறப்போட்டு வைத்திருந்த அவர் சமீபத்தில் எடுத்த படமான ‘கங்காரு’ படத்தில் ஒரு சீனாக வைக்க நினைத்தார். அதாவது ட்விட்டரில் அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டைப்போட்டுக் கொள்வார்களே அந்த மாதிரி.
‘கங்காரு’ படத்தில் நடித்த இரண்டு ஹீரோயின்களில் ஒருவரை விஜய் ரசிகையாகவும், ஒருவரை அஜித் ரசிகையாகவும் ஆக்கிவிட்டு இரண்டு பேரும் எங்க ஹீரோ தான் உசத்தி என்கிற ரேஞ்சில் சண்டைப்போட்டுக்கொள்வதாக காட்சியை வைத்திருக்கிறார்.
புகழ்ந்தால் பிரச்சனை இல்லை. இரண்டு நடிகர்களையும் ரசிகைகள் மாறி மாறி திட்டிக்கொள்வது போல காட்சியை வைத்தால் அது என்றைக்குமே வம்புதானே? கங்காருவை ‘லிங்கா’ விவகாரத்தில் ரஜினியையே வீதிக்கு இழுத்து விட்ட வினியோகஸ்தர் சிங்காரவேலன் தான் ரிலீஸ் செய்கிறார்.
அந்த விவகாரத்தில் விஜய்யின் கையாள் என்று ரஜினி ரசிகர்களால் சொல்லப்பட்டு வந்த சிங்காரவேலன் படத்தில் விஜய்யை திட்டும் காட்சியைப் பார்த்ததும் கடுப்பு தாங்க முடியவில்லையாம். அந்த வாய்த்தகறாரு ஒரு கட்டத்தில் கை கலப்பாக மாற, அந்த வேகத்தில் சாமியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருக்கிறார் சிங்காரவேலன். அவ்வளவு தான் அந்த திடீர் அறையில் எதுவுமே பேச முடியாமல் அமைதியாகி விட்டாராம் சாமி.
ஒரு காலத்தில் தன் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களைத் தான் கன்னத்தில் அறைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சாமி. இப்போது அவரே ஒரு வினியோகஸ்தரிடம் அறை வாங்கியிருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.