ஹன்சிகா நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணண் – Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார். அடுத்ததாக, இன்று குடும்பங்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் சயின்பிக்சன், ஃபேண்டஸி வகையில் காமெடி ஹாரர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் R.கண்ணன் ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து இப்படத்தை உருவாக்குவது குறிப்பிடதக்கது. தமிழ் சினிமாவுக்கு புதியதாகவும், ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாகவும் இப்படம் இருக்கும்.

Related Posts
1 of 4

ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ECR-ல் ஒரு பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை பெரும் பொருட்செலவில் அமைக்கிறார்கள். இப்படத்திற்காக, தலை சிறந்த அனிமேஷன் கம்பெனியுடன் இணைகிறார் ஆர்.கண்ணன்.
இப்படத்தின் படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று பூஜையுடன் ஆரம்பமானது. பைனான்சியர் மகேந்திரா நிஹார் காமெராவை ஆன் செய்ய படபிடிப்பும் இனிதே துவங்கியது. 2022 ஆகஸ்ட் 15 வெளியீடு.