இவங்க தான் தமிழ்சினிமாவோட ‘மலர்’ டீச்சர் : என்ன ஆள் தான் கொஞ்சம் ஒல்லி!

Get real time updates directly on you device, subscribe now.

Janani

பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில், தனது காந்த கண்களாலும் யதார்த்தமான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் மனசை வென்ற ஜனனிக்கு தொடர் வெற்றி தான் கிடைக்கவில்லை.

அதன்பிறகு மலையாளப் படங்களில் நடிக்கப் போனவர் சின்ன கேப்புக்குப் பிறகு தற்போது ‘உல்டா’ மற்றும் ‘தொல்லைக்காட்சி’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கும் படம் ‘உல்டா’. சைக்கலாஜிக்கல் த்ரில்லரான இந்த படத்தின் டப்பிங் முடிவடைந்து விட்டது. அதேபோல் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவியாளரான சதிக்கான் இயக்கம் படமான ‘தொல்லைக்காட்சி’யின் முதற்கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

இந்த படத்தில் முதல் முறையாக பாரம்பரியமிக்க தமிழ் பெண் வேடத்தில் நடிக்கும் ஜனனிக்கு படத்தில் கேரக்டர் பெயர் ‘மலர்’.

‘பிரேமம்’ படத்தில் வந்த மலர் டீச்சர், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். அது போல இந்த படத்தில் என்னுடைய ‘மலர்’ கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவரும்!” என்று அதிர வைக்கிறார் ஜனனி.

இப்படித்தான் தெலுங்கு பிரேமம் படத்தின் மலர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் சேலை கட்டிய புகைப்படத்தை ரசிகர்கள் ட்விட்டரில் செமையாக கலாய்த்து தள்ளினார்கள்.

அதே உடல்வாகுடன் இருக்கும் ஜனனியும் நான் தான் தமிழ்சினிமாவோட மலர் டீச்சர் என்று சொல்வதைப் பார்த்து கலாய்க்காமல் இருந்தால் சரி!