அப்பாடா… விஷாலுக்கு ஜோடி கெடைச்சாச்சு! : மிஸ்கின் நிம்மதி

Get real time updates directly on you device, subscribe now.

vishal

படங்களுக்கு டைட்டில் வைப்பது போலத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது படங்களுக்கு நாயகி வேட்டையாடுவதும்!

அதிலும் விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கே இந்த நிலைமை என்றால் அடுத்த லெவல்ஸ் ஹீரோக்கள் படும் பாடெல்லாம் சொல்ல முடியாது போலிருக்கிறது.

ஒரு படம் முடியவும் தாமதிக்காமல் அடுத்த படத்தை ஆரம்பித்து விடுவார் விஷால். அப்படித்தான் இப்போது கைவசம் ‘மருது’, ‘துப்பறிவாளன்’, ‘கத்திச் சண்டை’ என வரிசையாக படங்களை வைத்திருக்கிறார்.

இதில் துப்பறிவாளன் படத்தை மிஸ்கின் இயக்குகிறார். தற்போது ‘சவரக்கத்தி’ படப்பிடிப்பில் இருக்கும் மிஸ்கின் அது முடியவும் ‘துப்பறிவாளன்’ படத்தை ஆரம்பிக்கிறார்.

Related Posts
1 of 75

படத்தின் நாயகி, இதர நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. எல்லா டிபார்ட்மெண்ட்டுக்கும் சரியான ஆட்களை பிடித்துப் போட்டு விட்ட மிஸ்கின் நாயகி விஷயத்தில் மட்டும் தடுமாறிக் கொண்டிருந்தார்.

பல முன்னணி நடிகைகளை கேட்டுப் பார்த்தும் எல்லோருமே பிஸி என்ற வார்த்தையையே சொல்லிவிட, இப்போது ஒரு வழியாக தெலுங்கில் கல்லா கட்டி வரும் ரகுல் ப்ரீத் சிங்க்கை விஷாலுக்கு ஜோடியாக கமிட் செய்திருக்கிறாராம்..

தமிழில் ‘தடையற தாக்க’, ‘புத்தகம்’ என ஒன்றிரெண்டு படங்களில் நடித்த ரகுல் தொடர்ந்து எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையாததால் தெலுங்குக்கு போனார். அங்கு இப்போது அவர் தான் முன்னணியில் இருக்கிறார்.

இதேபோல ‘கத்திச்சண்டை’ படத்துக்கும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் ‘பிரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டியன் நடிப்பார் என்று வந்த தகவலை அவரே மறுத்து விட்ட நிலையில் அந்தப் படத்துக்கு இன்னும் நாயகி வேட்டை தொடர்கிறது.