‘அதிமுக’வில் தான் சேரணும் : கலைஞர் டிவியில் இருக்கும் போதே முடிவு செய்த நமீதா?

Get real time updates directly on you device, subscribe now.

namitha1

இன்று காலை ‘தினத்தந்தி’ பேப்பரை பிரித்தவர்கள் எல்லோருமே படித்திருக்கும் செய்திகளில் மிக முக்கியமான செய்தி ‘நமீதா அதிமுகவில் இணைகிறார்’ என்கிற செய்தியாகத்தான் இருக்கும்.

எப்போதுமே நமீதா என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு உற்சாகம் பிறந்து விடும். அந்தளவுக்கு எல்லா ரசிகர்களையும் ‘மச்சான்’, ‘மச்சான்’ என்று அன்போடு அழைத்து அவர்களை உற்சாகப்படுத்துபவர்.

கடந்த சில வருடங்களாக தமிழில் சொல்லிக் கொள்ளும் படி பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர், தனது குண்டான உடம்பை இளைத்து  ஸ்லிம் ஆகி இப்போது ‘பொட்டு’ என்ற படத்தில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் நமீதா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக இன்று செய்தி வெளியாகியிருக்கிறது.

Related Posts
1 of 8

சரி இது தேர்தல் நேரம் என்பதால் நமீதா இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் நமீதா அதிமுகவில் இணையும் முடிவை கலைஞர் டிவியில் இருந்த போதே எடுத்து விட்டதாக சொல்கிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.

கலைஞர் டிவியில் பிரபலமான நடன நிகழ்ச்சியான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் குஷ்புவுடன் சேர்ந்து நடுவராக இருந்தார் நமீதா. அப்போது தான் அரசியலில் சேரும் ஆர்வம் நமீதாவுக்கு வந்ததாம். அந்த சமயத்தில் மீடியாக்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ”அரசியலில் இறங்கும் ஆர்வம் இருக்கிறது. விரைவில் நான் அரசியலுக்கு வருவேன்” என்று சொல்லி வந்தார் நமீதா.

அப்படி நினைத்தவர் திமுகவில் இணையாமல் ஏன் அதிமுகவில் இணைகிறார் என்கிற சந்தேகம் வரலாம். ஒரு பெண் தலைவராக இருக்கும் கட்சியில் சேர வேண்டும் என்பதே அவருடைய ஆசை. அதற்கு  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி தான் தனக்கு தோதான கட்சி என்பதால் அதிமுகவில் இணையும் முடிவை இந்த தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் நமீதா.