இன்று முதல் வெங்கட் பிரபுவின் “ஆர்.கே.நகர்”

Get real time updates directly on you device, subscribe now.

2017ம் ஆண்டு வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவானத் திரைப்படம் “ஆர்.கே.நகர்”. அந்த நேரத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் சரவணராஜன் இயக்கி இருந்தார். இசையமைப்பாளர் பிரேம்ஜி இசையமைத்திருந்தார்.

வைபவ், சனா அல்தாப். அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்திருந்த இப்படம் 2018ல் வெளியாகவிருந்தது. ஆனால் பல காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிப் போனது. தற்போது வரை இப்படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ படத்தினைப் போல் இப்படத்தையும் ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தன.. இதனையடுத்து இப்படம் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் இன்று முதல் வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.