‘மச்சான்ஸ்’ நமீதாவுக்கு டும் டும் டும்! : மாப்பிள்ளை யார் தெரியுமா?

Get real time updates directly on you device, subscribe now.

namitha

‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நமீதா. தொடர்ந்து ‘ஏய்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருக்கு தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் தமிழ்நாட்டிலேயே செட்டிலானவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சம்பாதித்து வந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக வந்தவர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். ‘மச்சான்ஸ்’ என்று ரசிகர்களை செல்லமாக அழைத்து வந்த நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து புதுப்படங்களில் நடிப்பார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றின் மூலமாக அறிவித்திருக்கிறார்.

Related Posts
1 of 4

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவுடன் பங்கேற்ற ரைசா வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் வீரா என்பவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், எங்கள் திருமணம் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் அவர் தெறிவித்துள்ளார்.

இந்த வீரா என்பவர் ‘மியா’ என்ற படத்தில் நமீதாவுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.