இனிமே இப்படித்தானாம் ‘ஆன்ட்டி’ சுவாதி!

தெலுங்கில் கிருஷ்ணவம்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சுவாதியை தமிழில் தனது சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகிய அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சசிக்குமார்.
படம் ரிலீசாகி வசூலில் சக்கை போடு போட்டதும் இயக்குநராக இருந்த சசிக்குமார் ஹீரோவாகவும் பிரபலமாகி விட்டார்.
ஆனால் சுவாதியே எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையாமல் மீண்டும் தெலுங்குப் படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார்.
அவ்வப்போது போராளி உட்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் தலை காட்டி வந்தவருக்கு இப்போது தெலுங்கிலும் கூட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம்.
சமீபத்தில் கூட சுவாதியை ஒரு ரசிகர் ஆண்ட்டி என்று கிண்டல் செய்ய கொண்டையை முடிந்து கொண்டு ஆமாண்ட்டா.. நான் ஆண்ட்டி தான் அதுக்கென்ன இப்போ என்று சண்டை கூட போட்டார்.
இதுவரை சுவாதி நடித்த எந்தப் படத்திலும் கவர்ச்சி காட்டி நடித்ததில்லை. முதல்முறையாக திரிபுரா என்ற தெலுங்கு பேய்ப் படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
வாய்ப்புகளை குறைந்ததாலேயே சுவாதி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள்.
இதுவும் கூட எத்தனை படங்களுக்கு தாக்குப் பிடிக்குமோ..? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.