சந்தானத்தை சங்கடப்படுத்திய ‘வாட்ஸ் அப்’ வதந்தி!
‘இனிமே இப்படித்தான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க உற்சாகத்தோடு களமிறங்கியிருக்கிறார் காமெடி நடிகர் சந்தானம்.
அவருடைய அடுத்த படத்தை லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா இயக்கப் போகிறார். அதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நேரத்திலா அப்படி ஒரு செய்தி பரவ வேண்டும்?
இன்று காலை முதலே திருப்பதி கோவிலில் தன்னுடன் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்த நாயகி ஆஷ்னா சாவேரியை ரெண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றுவாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. அது உண்மையாக இருக்குமோ என்று நம்பும் விதமாக திருப்பதி கோவிலில் சந்தானமும்- ஆஷ்னா சாவேரியும் நடந்து வருவது போன்ற புகைப்படமும் வெளியாகியிருந்தது.
ஆனால் இந்தச் செய்தியை மறுத்திருக்கிறது சந்தானம் வட்டம்.
எப்போதுமே ஒரு புதுப்படத்தை ஆரம்பிக்கும் போது அந்தப் படக்குழுவினருடன் திருப்பதி சென்று சாமி கும்பிடுவது சந்தானம் சாருக்கு வழக்கம். அப்படித்தான் தனது அடுத்த படத்திலும் நாயகியாக நடிக்கும் ஆஷ்னா சாவேரியுடன் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிடப் போயிருந்தார்.