300 கோடி வசூலாகும் ‘சி 3’ : வியாபாரத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் சூர்யா!

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்சினிமாவில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் யார்? என்கிற சந்தேகம் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களிடையே எப்போதுமே இருந்து வரும் கேள்வி?

இந்த இடத்துக்காக விஜய் – அஜித் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் சண்டைப் போட்டுக் கொள்வதெல்லாம் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிற ஒன்று.

எந்த ஹீரோ அதிக சம்பளம் வாங்குகிறார் அவருக்குத் தான் முதலிடம் என்று ரசிகர்கள் ஒரு கணக்கைப் போட்டுக் கொண்டிருக்க, வாங்குகிற சம்பளத்தை விட யாருடைய படம் அதிக விலைக்கு வியாபாரம் ஆகிறதோ அதைப் பொறுத்து நம்பர் 1, நம்பர் 2 இடத்தை தீர்மானிப்பது தான் சரியாக இருக்கும் என்றார் சி 3 தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா.

அவர் தயாரிப்பில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் சி 3 படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

சிங்கம் பட வரிசையில் மூன்றாவது பாகம் என்பதால் இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற இந்தப்படம் வருகிற பிப்ரவரி 9ம் உலகமெங்கும் ரிலீசாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவரும் ‘சி 3’ செய்த வியாபார சாதனை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

Related Posts
1 of 104

முதல் பேசிய விநியோகஸ்தர் சக்திவேலன் ‘சி 3’ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. எங்களிடமிருந்து தமிழ்நாட்டு உரிமையை மொத்தமாக ஒருவர் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து மற்றவர்கள் வாங்கி அந்த உரிமை ரெண்டு வாரத்துக்குள்ளேயே தமிழகம் முழுவதும் விற்று தீர்ந்து விட்டது.

இது சமீபகாலத்தில் நடக்காத ஒரு விஷயம். அந்தளவுக்கு இந்தப் படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியிலும், தியேட்டர் ஓனர்ஸ் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்.

இந்தப் படத்தை பொறுத்தவரை ரஜினி சாருக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹிந்தின்னு கணக்கெடுத்துக் கொண்டால் 200 கோடியை
மிக எளிதாக வசூல் செய்யும். கடவுள் அருள் இருந்தால் 300 கோடி கிளப்பிலும் சேரும்” என்றார் சக்திவேலன்.

தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ”எப்போதுமே எங்களுடைய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் நாங்கள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்டை வெளியில் சொல்வதில்லை. அதற்கு காரணம் பொய் சொல்லக்கூடாது என்பது ஒன்றாக இருந்தாலும், இந்த மாதிரி பப்ளிசிட்டியை சூர்யா சார் விரும்புவாரா? இல்லையா?என்கிற சந்தேகம் இருந்தது. அந்த கலெக்‌ஷன் ரிப்போர்ட் வெளியாவதால் மத்தவங்க காயப்பட்டு விடக்கூடாது என்று அவர் நினைப்பார்.

இருந்தாலும் இந்த முறை சூர்யா சாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு ரசிகர்களுக்காக இந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.

வாங்குற சம்பளத்தை வைத்து நம்பர் 1, நம்பர் 2 இடமெல்லாம் இல்லை. வியாபாரத்தை பொறுத்து தான் அந்த இடம் தீர்மானிக்கப்பட வேண்டும். அந்த வகையில் மொத்த வியாபாரத்தை வைத்து நம்பர் 1, நம்பர் 2 இடம் இருக்கிறதென்றால் ரஜினி சாருக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வியாபாரம் இருப்பது சூர்யா சாருடைய படங்களுக்குத்தான் என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

சி 3 படத்தைப் பொறுத்தவரை ரிலீசுக்கு முன்பே 100 கோடிக்கு வியாபாரமாகி விட்டது. அதேபோல ரஜினி சாருக்கு அடுத்தபடியாக தெலுங்கிலும் சூர்யா சாரோட படங்களுக்குத்தான் நல்ல வரவேற்பும், வியாபாரமும் இருக்கிறது” என்றார் ஞானவேல்ராஜா.