மீண்டும் நண்பர்கள் ஆன தனுஷ், சிவகார்த்திகேயன்!
தமிழ்சினிமாவுக்குள் வந்த குறுகிய காலத்துக்குள்ளாகவே முன்னணி ஹீரோக்களில் ஒருவராகி விட்டார் சிவகார்த்திகேயன்.
அவருடைய இந்த அசூர வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் தனுஷ். அவர் தான் காமெடியனாகவே இருந்த சிவகார்த்திகேயனை தனது சொந்த நிறுவனத்தில் ஹீரோவாக வளர்த்து விட்டார். தொடர்ந்து அவருக்காக கதை கேட்பது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் பங்கெடுத்துக் கொண்டார்.
இப்படி நெருக்கமாக இருந்த தனுஷ் சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோவானதும் அதிக சம்பளம் கேட்டு தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
அதன்பிறகு இருவருக்குமான நட்பு முறிந்து போனது. ஆனால் இருவருவே இதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் இருவரின் நடவடிக்கைகளிலும் அதை அப்பட்டமாகக் காண முடிந்தது.
இப்படி பிரிந்திருந்த தனுஷும், சிவகார்த்திகேயனும் தான் நேற்று முன் தினம் நடந்த நடிகர் சங்கத்தின் அறப் போராட்டத்தில் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
முன்னதாக இந்தப் போராட்டத்தில், விஜய்யின் அருகில் தான் அமர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன். அவருக்குப் பின் சற்று தாமதமாக வந்த தனுஷைப் பார்த்ததும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி கட்டிப்பிடித்து கை குலுக்கினார். பின்னர் விஜய்யின் அருகிலேயே தனுஷை அமரவும் வைத்த சிவகார்த்திகேயன் நீண்ட நேரம் தனுஷுடன் பேசிக்கொண்டிருந்தார்.
இருவருமே எதிரிகள், சில வருடங்களாகப் பேசிக் கொள்வதில்லை என்று இருவரின் ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்நடிகர் சங்கப் போராட்டம் மூலம் இருவரும் நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருப்பது இருவருடைய ரசிகர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.