ஹீரோ படம் குறித்து யுவன்சங்கர் ராஜா
ஹீரோ படம் குறித்து யுவன் சங்கர் ராஜா கூறியதாவது,
“சமூகத்தில் இந்த தருணத்திற்கு தகுந்த செய்தியை அழுத்தி சொல்லும் படமாக ஹீரோ இருக்கிறது. படக்குழு அதை சரியாகவும், நேர்த்தியான படைப்பாகவும் தந்திருக்கிறார்கள். பொன்மொழி ஒன்று இருக்கிறது. “ஹீரோக்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்” என்று, என்னைப் பொறுத்தவரை இந்த “ஹீரோ” திரைப்படம் “ஹீரோக்கள் பிறப்பதில்லை சூழ்நிலைகளே அவர்களை உருவாக்குகிறது” என்பதை சொல்லும்.
படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களும் அதனை உணர்வார்கள் மேலும் படம் அவர்களை ஒரு நீண்ட சிந்தனைக்கு இட்டு செல்வதாகவும் இருக்கும். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜீன் சார், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா மற்றும் நடித்துள்ள அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள். தயாரிப்பாளர் கோட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால் இப்படம் இவ்வளவு பிரமாண்டமாக உருவாகியிருக்க முடியாது.” என்றார்