நாட்டிய பேரொளி, பின்னணிப் பாடகி, அடுத்து..? – மிரள வைக்கப் போகும் ஐஸ்வர்யா தனுஷ்

Get real time updates directly on you device, subscribe now.

‘3’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ்.

அடுத்து கெளதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். சுமாராக ஓடிய அந்தப் படத்தைத் தொடர்ந்து பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழரான மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அறிவித்தார்.

ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்காரர்கள் படமாக எடுத்து அவரை பெருமைப்படுத்தினார்கள். அதுமாதிரியே மாரியப்பன் விஷயத்திலும் பாலிவுட்காரர்கள் முந்தி விடக்கூடாது என்பதற்காக மாரியப்பன் படத்தை தான் இயக்கப் போவதாக முந்திக்கொண்டு அறிவித்திருந்தார் ஐஸ்வர்யா.

Related Posts
1 of 36

அது குறித்தான செய்திகள் கூட மீடியாக்களில் வெளியானது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. தற்போது திடீரென்று மாரியப்பன் தங்கவேலு படத்தை கிடப்பில் போட்டு பேய் படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறாராம்.

வழக்கம் போல ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் தான் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கப் போகிறார். ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ஏற்கனவே பரத நாட்டியத்தில் புதுமை செய்த ஐஸ்வர்யா சமீபத்தில் தான் மகளிர் தினத்தையொட்டி பின்னணிப் பாடகியாக அவதாரமெடுத்து ரசிகர்களை மிரள வைத்தார்.

தற்போது ரசிகர்களை திரையில் மிரட்டும் விதமாக பேய்ப்படம் ஒன்றை இயக்கப் போவது இந்தப்படம் எப்படியிருக்குமோ என்று நினைத்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.