பில்டப் கொடுத்த அஜித் ரசிகர்கள்! : கழுவி கழுவி ஊற்றிய கமல் ரசிகர்கள்!!
தமிழ்சினிமாவில் புதிதாக எந்த ஒரு தொழில்நுட்பம் வந்தாலும் அதை தனது படங்களில் செய்து பார்ப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர் நடிகர் கமல்ஹாசன்.
‘தசாவதாரம்’ படத்தில் 10 வகையான கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். இன்னும் புதிதாக எந்த ஒரு தொழில்நுட்பம் வந்தாலும் அதை தனது படங்களில் செய்து பார்ப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். ஹாலிவுட் தரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டண்ட் காட்சிகளை ரிஸ்க் எடுத்து செய்வார்.
நிஜம் இப்படியிருக்க, என்னவோ அஜித் தான் புதிதாக பைக் சாகசம் செய்கிறார் என்கிற நினைப்பில் ‘ஏ.கே 57’ படத்தில் அஜித் நடித்த ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியின் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டது.
வீடியோவைப் பார்த்த அஜித் ரசிகர்கள் இந்த மாதிரியான ஸ்டண்ட்டை எல்லாம் தல ஒருவரால் மட்டுமே செய்ய முடியும் என்றெல்லாம் பில்டப் கொடுத்து வாசித்தார்கள்.
அவ்வளவு தான் அஜித் ரசிகர்களின் இந்த பில்டப்பைப் பார்த்த கமல் ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள்.
அஜித் இந்த மாதிரியான ஸ்டண்ட்டை செய்றதெல்லாம் ரொம்ப ரொம்ப லேட்டு. எங்க உலகநாயகன் சத்யா படத்திலேயே இந்த மாதிரியான ஸ்டண்ட் சாகசத்தை செய்து விட்டார். அதை காப்பியடித்து இப்போது அஜித் செய்கிறார். புதுசா செய்யச்சொல்லுங்க… என்று அஜித்தின் சாகசத்தை கழுவி கழுவி ஊற்றியிருக்கிறார்கள்.
இதுக்கப்புறமும் அஜித் ரசிகர்கள் வாயைத் தொறந்திருப்பாங்கன்னு நெனைக்கிறீங்க..?