அஜித்துக்கு நேரம் நல்லாயிருக்காம்! : அதனால..???

சினிமாவில் நேரம் என்பது அமைய வேண்டும். இல்லையென்றால் எப்பேர்ப்பட்ட ஹீரோவும் ‘சொம்படி’ச் சித்தராகி விடுவார்கள்!
அதுவே டைமிங் நல்ல விஷயமாக இருக்கும் போது வழக்கமான முடிவுக்கு மூடுவிழா நடத்தி விட்டு அப்படி ஒரு முடிவை எடுத்துத் தானே ஆக வேண்டும்.
அப்படி ஒரு முடிவைத் தான் எடுக்கப் போகிறாராம் ‘தல’ அஜித்!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்தாலே பெரிய விஷயம் என்பது தான் அஜித் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் வாடிக்கையாக இருந்து வந்தது.
அப்படி பெரிய எதிர்பார்ப்பில் வருகின்ற ஒரு படமும் தோல்விப் படமாகி விட்டால் மாஸ் ஹீரோவுக்கு கெட்ட பெயர் தானே?
நல்ல வேளையாக அஜித்துக்கு சென்ற வருடம் இரண்டு படங்கள் ரிலீசாகி விட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு படங்களுமே நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றது தான். அதிலும் ‘வேதாளம்’ படம் தான் சென்ற ஆண்டில் அதிக கலெக்ஷனை அள்ளி முதலிடத்தில் இருந்த படம்.
இந்த டைமிங் சூப்பராக ஒர்க்-அவுட் ஆக ஆரம்பித்திருப்பதால் இனி வருஷத்துக்கு ஒரு படம் என்கிற தனது ரெகுலர் மனநிலையை லைட்டாக மாற்றி மூன்று மாதங்களுக்கு ஒரு படம் கொடுத்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம்!.
அப்படி ரிலீசாகும் படங்களில் ஒன்று தோல்விப்படமானால் கூட வெற்றிப்படத்தை கைகாட்டி புதுப்படங்களை கமிட் செய்து கொள்ளலாமே என்பது தான்அவர் போடும் கணக்கு.
அவரின் இந்த முடிவு அவருக்கு சந்தோஷத்தை தருகிறதோ இல்லையோ? கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு உச்சி குளிர்ந்து போயிருக்கும்!