அஜித்தின் 57-வது பட டைட்டில் ‘விவேகம்’ : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

‘வேதாளம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் 57 வது படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

டைட்டில் வைக்கப்படாமல் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் எல்லோரும் சுருக்கமாக தல 57 என்று அழைத்து வந்தனர்.

80 சதவீதப் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடப்படவில்லையே என்று அஜித் ரசிகர்கள் அனைவரும் மாதக்கணக்கில் கவலையில் காத்துக் கிடந்தனர்.

அதோடு சீக்கிரம் படத்தின் டைட்டிலை அறிவியுங்கள் என்று அப்படத்தின் இயக்குநர் சிவாவுக்கு கோரிக்கை வைத்தபடியும் இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தல 57 படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி 2ம் தேதி ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts
1 of 54

அந்த வகையில் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பிப்ரவர் 2ம் தேதி நள்ளிரவு 12மணிக்கு அஜித்தின் 57 வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

‘விவேகம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிக்ஸ்பேக் லுக்கில் காட்சியளிக்கிறார் அஜித்.

வீரம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து செண்டிமெண்ட்டாக இந்தப்படத்துக்கும் வி என்ற எழுத்திலேயே ஆரம்பிக்கும் விதமாக விவேகம் என்ற டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.

இந்த டைட்டில் விபரம் வெளியாகவும் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் அதை ட்ரெண்ட்டிங்கில் ஏற்றி கொண்டாடி வருகிறார்கள்.

அடுத்து படத்தின் டீஸர் எப்போது ரிலீசாகும்? என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.