நீ தான்டா நம்பிக்கைத் துரோகி : ஆதாரங்களுடன் டிங்குவுக்கு பதிலடி கொடுத்த அம்ரீஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

சில தினங்களுக்கு முன்பு தனது படத்துக்கு போட்டு வைத்திருந்த பாடல்களைத் திருடி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் பயன்படுத்திவிட்டதாக ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார் சின்னத்திரை நடிகர் டிங்கு.

அந்த வீடியோவை நாமும் ஷேர் செய்திருந்தோம்.

ஆனால் டிங்கு தனது வீடியோவில் சொன்ன அத்தனை குற்றச்சாட்டுகளையும் முழுமையாக மறுத்த இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் டிங்கு என்னை ஏமாற்றியதற்கு ஆதாரங்கள் நெறைய இருக்கு; அவனிடம் ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும் என்றார் ஆவேசமாக…

இந்த சர்ச்சைக் குறித்து விளக்க நிருபர்களை சந்தித்த இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் மேலும் கூறியதாவது :

”’தாத்தாக் கார தொடாதே’ன்னு ஒரு படம் எடுக்கப் போறேன். அதுக்கு நீ தான் மியூசிக் போடணும்னு சொல்லி டிங்குவும், ராபர்ட்டும் என்னிடம் வந்தார்கள். வந்தவர்கள் எனக்கு அட்வான்ஸ் தொகை கூட தராமல், இலவசமாக இசையமைக்கச் சொன்னார்கள். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்.

அவர் சொன்ன அந்த ‘ஹர ஹர மகாதேவகி’ பாடலை எழுதியது பாடலாசிரியர் சொற்கோ. ஆனால் டிங்குவோ அவரும், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும் சேர்ந்து எழுதியதாக பச்சைப் பொய்யை சொல்கிறார்.

Related Posts
1 of 16

அதன்பிறகு ‘பஜனை பாப்பா பஜனை பாப்பா’ன்னு ஒரு பாடலையும் போட்டுக் கொடுத்தேன். அந்தப் பாடலை போட்டு முடிச்சதும் இதை ஷூட் பண்ணிட்டு வந்தால் அதை வெச்சு ஒரு தயாரிப்பாளரை புடிச்சிரலாம்னு சொல்லி அதை படமாக்க என்கிட்டேயே பணம் கேட்டாங்க. சரி நானும் நாம போட்ட பாட்டை விஷுவலா பார்க்கலாமேன்னு ஆசைப்பட்டு அவங்க கேட்ட 5 லட்சம் ரூபாய்ல ஒன்றரை லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தேன்.

அதை வாங்கிட்டு ரிகர்சல் பார்க்கப் போறோம்னு பாங்காங் போனாங்க. அவங்க அங்க ‘பஜனை பாப்பா பஜனை பாப்பா’ பாட்டுக்கு ரிகர்சல் எடுத்தாங்களா இல்லையான்னு தெரியல. ஆனா அங்க நல்லா பஜனை பண்ணிட்டு வந்திருக்காங்கன்னு மட்டும் தெரியுது. ஏன்னா அங்க போயிட்டு வந்த உடனே கால், முட்டியெல்லாம் ரொம்ப வலிக்குதுன்னு சொன்னாங்க.

இந்த விஷயத்துக்கும் லாரன்ஸ் மாஸ்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் ரிலீசாகப் போற இந்த நேரத்துல வேணும்னே இப்படி ஒரு பிரச்சனையை கிளப்பியிருக்காங்க. அவங்க என்னை ஏமாத்துனதுக்கு எல்லா ஆதாரங்களையும் வெச்சிருக்கேன். அதே மாதிரி அவங்களும் ஆதாரம் இருந்தா வெளியிடட்டும். கண்டிப்பா அவங்ககிட்ட இருக்காது.

ஏன்னா எல்லாமே என்னோட உழைப்பு, என்னோட காசு. என்னோட உழைப்பையும் திருடிட்டு, காசையும் வாங்கி ஏமாத்திட்டு இப்போ அபாண்டமா பொய் சொல்கிறான் டிங்கு. என்னை நம்பிக்கைத் துரோகின்னு சொன்ன டிங்கு அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டட்டும். ஆனால் அவன் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செஞ்சதுக்கு எக்கச்சக்க ஆதாரங்கள் இருக்கு.

எனக்கு நடிப்பு வராது. இசையமைக்கத்தான் ரொம்ப விருப்பம். அதுக்காக நான் ரொம்ப உழைக்கிறேன். அதனாலேயே என்னோட இசைத் திறமையைக் காட்ட ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துல வாய்ப்பு கெடைச்சது. அதுல சிங்கிள் ட்ராக் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கெடைச்சிருக்கு. இப்பத்தான் நான் வளர்ந்து வர்றேன். இந்த நேரத்துல இப்படி டிங்கு சொன்னதும் எனக்கு வேதனையாயிடுச்சு.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் இருக்கும் பாடல்கள் எல்லாமே என்னுடையது தான் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது, டிங்குவிடம் அப்படி ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுங்க” என்றார் அம்ரீஷ் கணேஷ்.

பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகனான அம்ரீஷ், நானே என்னுள் இல்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு இசையமைப்பதில் ஆர்வம் என்பதால், தற்போது இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் ஒரு படம் உள்ளிட்ட கைவசம் நான்கைந்து படங்களை வைத்திருக்கிறார் அம்ரீஷ்.