ரஜினி ஸ்டைலில் கலக்கப் போகும் ‘தல’ அஜித்!
‘என்னை அறிந்தால்’ வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடித்து வரும் புதிய படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே ரிலீசான வீரம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதால் மீண்டும் கால்ஷீட் கொடுத்தார் அஜித். இப்படத்தில் அஜித்துடன் லட்சுமிமேனன், சூரி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
இந்த மே மாதம் 7- ம் தேதி ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு படத்திலும் அஜித்தின் கெட்டப் எப்படி இருக்கும்? சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் வருகிறாரா? டான் ஆக வருகிறாரா? என்பது மாதிரியான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கும்.
அதேபோலவே இந்தப்படத்திலும் அஜித் எந்த கெட்டப்பில் வருவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர்களுக்கு குஷியான செய்தியாக படத்தில் அவர் ஒரு டாக்ஸி ட்ரைவராக வருகிறாரார் என்கிற புதிய தகவல் கசிந்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து கொல்கத்தாவுக்கு போகும் அஜித் அங்கு டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார். அவருக்கு ஒரு பாசமான தங்கை இருக்கிறார் என்று கதை போகிறதாம். இதை படிப்பவர்கள் இது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்ஷா படத்தைப் போலவே இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு பேசி வருகிறார்கள். அதோடு அவர் காக்கி ட்ரெஸ்ஸோடு படப்பிடிப்பில் இருப்பது போன்ற போட்டோக்கள் சில தினங்களுக்கு முன்பு லீக்கானது.
ஆகவே பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ட்ரைவர் கெட்டப்பில் கலக்கியது போல இந்தப் படத்தில் அஜித் டாக்ஸி டிரைவராக கலக்கப் போகிறாரோ..? என்கிற எதிர்ப்பார்ப்போடு ‘தல’ ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.