அஜித்தின் அடுத்த பட இயக்குனர் மாற்றம் ஏன்?

Get real time updates directly on you device, subscribe now.

ஜித் – இயக்குனர் சிவா கூட்டணியின் வெளியான ‘விவேகம்’ படு தோல்வியைச் சந்தித்தது.

இதனால் அப்செட்டான ரசிகர்கள் ”இனிமேல் சிவாவே வேண்டாம், வேறு இயக்குனரின் படத்தில் நடியுங்கள்” என்று அஜித்துக்கு வேண்டுகோள் வைத்தனர்.

ஆனால் அஜித் ரசிகர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மீண்டும் சிவாவுக்கே அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

‘விஸ்வாசம்’ என்ற டைட்டிலோடு தயாராகி வரும் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் கண்ணும் கருத்துமாக படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சிவா.

Related Posts
1 of 54

இதற்கிடையே ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கப் போகும் அடுத்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச். வினோத் இயக்கப் போவதாக தகவல் வெளியானது.

இதனால் அஜித் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் தற்போது ஹெச். வினோத் படத்தில் அஜித் நடிக்கவில்லையாம். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் நிறுவனத்துக்கு அஜித் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தார். அதன்படி அஜித்தின் அடுத்த படத்தை அந்த நிறுவனமே தயாரிக்கப் போகிறது.

ஆனால் அந்த நிறுவனம் ஹிந்தியில் ரிலீசாகி ஹிட்டான படங்களில் ஒன்றை தமிழில் ரீமேக் செய்ய விரும்பியிருக்கிறது. அதற்கு அஜித்தும் சம்மதம் சொல்லி விட்டார். இந்த காரணத்தினால் தான் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் அஜித்.