ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சாலும் பெருமை தான்! : நட்புக்கு மரியாதை செய்த விஜய் சேதுபதி!
தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க முதலில் நடிகர் ஜீவாவைத்தான் கேட்டுப் பார்த்தார்கள்.
முதலில் ஓ.கே சொன்ன ஜீவா பிறகு திடீரென்று அதில் நடிக்க மறுத்து விட்டார்.
இப்படித்தான் ‘டேவிட்’ படத்தில் விக்ரமின் நட்புக்காக நடித்துக் கொடுத்தார்.
ஆனால் படமும் பேசப்படவில்லை. படத்தில் அவரது கேரக்டரும் பேசப்படவில்லை.
இதை மனதில் வைத்துத் தான் ‘வட சென்னை’ படத்திலும் அப்படி ஒரு விஷயம் நடந்து விடக்கூடாது என்று விலகினாராம்.
இப்போது அவர் மறுத்த கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.
விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் நானும் ரெளடிதான் படத்தை தயாரித்தவர். அந்த நட்பு ஒரு காரணம் என்றாலும் அதற்காக மட்டும் இல்லாமல் ‘வட சென்னை’யின் கதைக்காக அதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தாலும் எனக்குப் பெருமை தான் என்பது தான் விஜய் சேதுபதி ஓ.கே சொன்னதுக்காக சொல்லும் காரணம்.
நட்புக்கு மரியாதை!