அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார்? : சத்தியமா ஷங்கர் இல்லீங்க…

Get real time updates directly on you device, subscribe now.

ajith1

‘விவேகம்’ படம் 100 கோடியை வசூல் செய்து வெற்றிப்படங்களின் வரிசையில் சேர்ந்து விட்டது என்கிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.

ஆனால் வாங்கிய விநியோகஸ்தர்களோ 40 முதல் 50 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று புலம்புகிறார்கள்.

உண்மையான வசூல் விபரத்தை வெளியிட வேண்டிய தயாரிப்பு தரப்போ அமைதியாகவே இருக்கிறது.

படம் ரிலீசாகி 25 நாட்கள் ஆகி விட்ட நிலையில் 10 ரூபாய்க்கு டிக்கெட் விலையை வைத்து படத்தை இன்னும் ஓட்டி வருகிறார்கள் சில தியேட்டர் உரிமையாளர்கள்.

Related Posts
1 of 54

இதற்கிடையே அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

அந்தக் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.

முன்னதாக அஜித்தின் அடுத்த படத்தை பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஷங்கர் தான் இயக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியானது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் தற்போது அந்த லிஸ்ட்டில் தற்போது ஷங்கர் இல்லையாம். கமல்ஹாசனுடம் புதுப்படம் ஒன்றில் இணைய ஷங்கர் முடிவெடுத்ததால் அஜித் படத்தை இயக்க விரும்பவில்லை என்று தெரிவித்து வெளியேறி விட்டாராம்.

இதனால் என்ன செய்வது என்று யோசித்த அஜித் மீண்டும் தனது ஆஸ்த்தான டைரக்டர் சிவாவுடன் இணைந்தே அடுத்த படத்திலும் வேலை செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

அஜித்தின் இந்த முடிவு அவருக்கு வேண்டுமானால் பிடித்தமானதான இருக்கலாம். ஆனால் விவேகம் படத்தைப் பார்த்த கடுப்பில் இருக்கும் அவரது ரசிகர்கள் இந்த காம்போவை எப்படி மீண்டும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.