அஜித் – சிவா கூட்டணியின் புதுப்படம் ‘விசுவாசம்’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

ajithஜித் – சிவா கூட்டணியில் வெளியான ‘விவேகம்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் அப்படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.

இதனையடுத்து மீண்டும் அஜித் – சிவா கூட்டணி தொடருமா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

அந்த சந்தேகத்துக்கு பதிலளிக்கும் விதமாக இன்று அஜித்தின் 58-வது பட அறிப்பு வெளியானது.

ஆமாம், அஜித்தின் அடுத்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார். குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு “விசுவாசம்” என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

Related Posts
1 of 57

வரும் ஜனவரி மாதம் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2018 தீபாவளி அன்று “விசுவாசம்” வெளிவரும் என்றும் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்திருக்கிறார்.

முன்னதாக விவேகம் படத்தின் தோல்விக்கு சிவா காரணமில்லை, தான் தான் காரணம் என்று அஜித் சொன்னதாகவும், ஏனென்றால் விவேகம் கதையை தனக்குப் பிடித்துப் போய் தான் ஓகே சொன்னதாகவும் அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆக தன்னால் ஏற்பட்ட தோல்வியை வெற்றியாக்கிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே மீண்டும் விவேகம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் அஜித் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் நடிக்கும் பிற நடிகர் – நடிகைகளின் விவரமும் டெக்னிக்கல் டீமின் விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.