‘படை வீரன்’ படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தனுஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

dhanush

பிரபல பின்னணிப் பாடகரும், தனுஷின் மாரி படத்தில் வில்லனாகவும் நடித்த பாடகர் விஜய் யேசுதாஸ் ‘படை வீரன்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். முக்கியமான கேரக்டரில் பாரதிராஜா நடிக்கிறார்.

இவோக் சார்பாக மதிவாணன் தயாரிக்கும் இப்படத்தை மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கி வருகிறார். இறுதிநாள் படப்பிடிப்பை மொத்தப் படக்குழுவும் விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கையில் நடிகர் தனுஷ் திடீர் விசிட் அடித்து படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

Related Posts
1 of 36

முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான “லோக்கல் சரக்கா பாரின் சரக்கா… ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா… ” எனத் தொடங்கும் பாடலை பாடி கொடுத்திருக்கிறார்.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை காட்சியை எடுத்த பிறகு படக்குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.  படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை மிகவும் பாராட்டினார். படைவீரன் படம் டிசம்பரில் வெளியாகிறது.