அஜீத் படத்தில் மிரட்டலான கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே!
‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிங்க் ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கத் தயாராகி வருகிறார் அஜீத்.
ஹெச்.வினோத் இயக்கப் போகும் இப்படத்தில் டாப்ஸி நடித்த கேரக்டரில் தமிழில் வித்யாபாலன் நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் ரங்கராஜ் பாண்டேவும் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி விட்டாலும், எந்தக் கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தற்போது அவருடைய கேரக்டர் பற்றிய ரகசியம் வெளியாகியிருக்கிறது.
ஹிந்தியில் பியூஸ் மிஸ்ரா நடித்த கேரக்டரான வக்கீல் கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் பிரபலங்கள் முன்னால் குறுக்குக் கேள்விகளைக் கேட்பதில் வல்லமை கொண்டவர் என்பதால் இந்தப் படத்தில் வக்கீல் கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் ஹெச்.வினோத் அவரை தேர்வு செய்திருக்கிறார்.