மீண்டும் மணிரத்னம் காம்பவுண்ட்டில் விஜய் சேதுபதி

Get real time updates directly on you device, subscribe now.

ணிரத்னத்தின் கனவுப் படங்களில் ஒன்று ‘பொன்னியின் செல்வன்’.

நீண்ட நாட்களாக இந்தப் படத்தை இயக்க வேண்டுமென்று திட்டமிட்டு வந்த அவர் தற்போது அதற்கான வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் வர இருக்கும் இப்படத்தையும் மல்டி ஹீரோ படமாக எடுக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிப்படமாக தயாராக இருக்கும் இப்படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் தமிழ்ப்பதிப்பில் நடிக்க சம்மதம் சொல்லி விட்டார்கள்.

Related Posts
1 of 34

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி.

அதேபோல இப்படத்தில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் நடிக்கிறார்கள். கூடவே துல்கர்சல்மான் மற்றும் நான் ஈ படத்தில் நடித்த நானியையும் இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.