‘அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்’ – இது படத்தோட டைட்டில் தான்

Get real time updates directly on you device, subscribe now.

வித்தியாசமான டைட்டிலோடு தமிழில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகும் அப்படி ஒரு படமாக லீ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆர்.விக்கி இயக்கத்தில் அறிமுக நாயகன் லீவருண் நடிப்பில் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

’அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நவம்பர் 15ம் தேதியன்று இனிதே துவங்கியது.

Related Posts
1 of 134

பூங்காவை மையமாக வைத்து ஒரே நாளில் நடக்கும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான காதல் கதை, வாழ்வியல் எதார்த்ததுடனும், இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய மாறுபட்ட படைப்பாக உருவாக இருப்பதாகவும் படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என இயக்குனர் விக்கி கூறுகிறார் .

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரத்னகுமார், இசை ஜெய்கிரிஷ், படத்தொகுப்பு ரமேஷ்பாபு மற்றும் லீ வருண் தயாரிப்பில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது