‘போதை ஏறி புத்தி மாறி’ தலைப்புக்காக அடம் பிடித்த தயாரிப்பாளர்

தீரஜ், துஷாரா, பிரதாயினி சுர்வா என முற்றிலும் அறிமுகங்கள் நடிக்க, ‘கிக்’கான தலைப்புடன் தயாராகியிருக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.

குறும்பட இயக்குனர் சந்துரு இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹீரோ தீரஜ் ஒரு மருத்துவராக நடித்திருக்கிறார். இப்படி ஒரு தலைப்பு தேவைதானா? என்று எல்லோரும் எதிர்க்க, இந்த தலைப்பு தான் வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்று வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் சாகர்.

Related Posts
1 of 135

”நிறைய கதைகள் கேட்டேன், ஏற்கனவே கேட்ட கதைகளாகவே இருந்தன. அந்த சமயத்தில் தான் இயக்குனர் சந்துரு ஒரு ஒன்லைன் சொன்னார். மிக நன்றாக இருந்தது, அப்போதே முழு கதையையும் சொல்லச் சொல்லி கேட்டேன். அடுத்து என்ன என்பதை கணிக்க முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக எழுதியிருந்தார்.

இந்த ‘போதை ஏறி புத்தி மாறி’ தலைப்புக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. ஆனால் இந்த தலைப்பு தான் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த மாதம் படத்தை பார்த்த, தணிக்கை குழுவினர், எல்லோரும் கண்டிப்பா பார்க்கணும் என சொல்லி படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்தனர் என்று படத்தைப் பற்றி சுவாரஷ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார் தயாரிப்பாளர் சாகர்.