80’s பில்டப்- விமர்சனம்

படத்தில் இருக்க வேண்டிய பில்டப் டைட்டிலில் மட்டுமே இருக்கிறது..
கதை?

சந்தானத்தின் தாத்தா வைரத்தை முழுங்கி இறந்துவிட்டார். கட்! தாத்தாவை அடக்கம் செய்யும் முன் சந்தானம் ஒரு சவாலில் ஜெயிக்க வேண்டும் என ஒரு கதை. கட்! எமனாக வரும் கே.எஸ் ரவிகுமார் கேங் ஒரு பக்கம் பங்கம் செய்ய, ஆளாளுக்கு நம் சங்கைக் கடிக்கத் துவங்குகிறார்கள். முடிவில் நம் சங்கைக் கடித்து ரத்தம் குடிப்பதே படத்தின் மொத்தக் கதையும்.

படத்தில் நடித்த அத்தனை பேரும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தான். ஆனால் எல்லோருமே டி.வி சீரியல் ஆட்கள் போல வசனங்களை ஒப்பித்துப் போகிறார்கள். வொர்ஸ்ட். அவர்கள் கேரக்டர்களுக்கான ரைட்டிங்கில் இயக்குநர் ஏகத்துக்கும் சொதப்பியுள்ளார்

கேமரா வொர்க் எவெரி ப்ரேமில் பல்லிளிக்கிறது. நிறைய ஷாட்ஸ் ஸ்டேட்டிக் ஷாட்ஸ். அவை அநியாயத்திற்கு சீரியல் Feel-ஐ கொடுக்கிறது. பின்னணி இசை பாடல்கள் இரண்டிலும் தன்னால் முடிந்த அளவிற்கு இம்சையை கொடுத்துள்ளார் ஜிப்ரான்..So sad sir

ஒரு நல்ல சுவாரஸ்யம் தரக்கூடிய கதை தான். ஆனால் அதை மகா மட்டமான தரத்துடன் திரைப்படைப்பாக்கியுள்ளார் கல்யாண். பெண்களை இழிவுபடுத்தும் காட்சியமைப்புகள், பாடிசேமிங் வசனங்கள் என ஏகத்துக்கும் 80’S சிந்தனைகள். ஒரு படத்தின் கெத்து என்பது டைட்டிலில் மட்டும் இருந்தால் போதுமா?
1.75/5

80sBuildup movieActor SanthanamActress radhika preethidirector Kalyaan