நோக்கம் புதுசாக இருந்தாலும் ஆக்கம் நன்றாக இருந்தால் தான் சினிமாவில் எடுபடும். ப்ளட் மணி என்ற கான்செப்டை புதிதாக பிடித்திருக்கிறார் இயக்குநர்.
அதென்ன ப்ளட் மணி?
குவைத் அரசாங்கம், ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தால் கொலை செய்தவர் கொலையுண்டவரின் குடும்பத்திற்கு பணம் கொடுக்க வேண்டும். அப்படி பணம் கொடுத்தால் விடுதலையா? என்றால் அது கிடையாது. பணம் வாங்கிய கொலையுண்ட குடும்பம் கொலை செய்தவரை மன்னித்துவிட்டோம் என்று ஒரு கடிதமும் கொடுக்கவேண்டும். இப்படத்தில் கொலைக்குற்றத்தால் மாட்டிக்கொள்கிறார்கள் இரு தமிழர்கள். அவர்கள் ப்ளட்மணி வழங்கிவிட்டார்கள். ஆனால் அந்தப்பணம் கொலையுண்ட குடும்பத்திற்குப் போய்ச்சேரவில்லை. இந்த இருவரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாட்டில் இருந்து மீடியாவில் வேலை செய்யும் பிரியாபவனி சங்கர் முயற்சிக்கிறார். முயற்சி என்னானது? என்பதே கதை
படத்தில் உறுத்தல் இல்லாத நடிப்பால் கவர்கிறார் பிரியா பவானிசங்கர். அவரைப் போலவே ஏனைய பாத்திரங்களும் எதார்த்த முகம் காட்டுகிறார்கள். கதை விசயத்தில் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். 27 மணி நேரத்தில் நடக்கும் கதையில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். மிகவும் உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் லாஜிக் ஓட்டைகளால் நமநமத்துப் போகிறது.
படத்தின் மேக்கிங் தரமாக இருப்பது மட்டும் தான் ஆறுதல்.
2.5/5