கிங்ஸ்டன்- விமர்சனம்

ஜிவி பிரகாஷ் கடலுக்குள் நடத்தும் பேயாட்டமே இந்தக் கிங்ஸ்டன்

1982-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தூவாத்துர் என்ற கிராமத்தில் கடலுக்குள் செல்லும் பலரும் மரணம் அடைகிறார்கள். அதற்கான காரணத்தை 2025-ஆம் ஜிவி பிரகாஷ் கண்டுபிடிக்கிறார். இதுதான் கிங்ஸ்டன் சொல்லும் கதை. But இதைச் சொல்வதற்காக சுத்திச் சுத்தி வரும் திரைக்கதை நம் மூளைக்கு பெருவலியை ஏற்படுத்தி விடுகிறது

ஜிவி பிரகாஷ் பொறுப்பணர்ந்து நடித்துள்ளார். நாச்சியார், ஜெயில் ஆகிய படங்களின் சாயல் கொண்ட கேரக்டரில், அந்தச் சாயல் தெரியாமல் நடித்துள்ளார். நாயகி திவ்யா பாரதிக்கு கதையில் கொஞ்சமே கொஞ்சம் வேலை வைத்துள்ளனர். அந்த வேலையை அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். ஜிவியின் நண்பர்களாக வரும் மூன்று பேர், ஒரு சிறுவன், படத்தின் வில்லன் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.

இசையில் பேயாட்டம் ஆடியுள்ளார் ஜிவி பிரகாஷ். பாடல்கள் அனைத்துமே ஆல்ரெடி ஹிட் என்பதால் அதைப்பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. பெரிதாக சிஜி வேலைகள் உள்ள இப்படத்தில் ஒளிப்பதிவைத் தரமாகச் செய்துள்ளார் கேமராமேன்.

டெக்னிக்கல் டீமை தரமாக ஒருங்கிணைத்த இயக்குநர் படத்தின் கதை திரைக்கதையில் மொத்தமாக கோட்டைவிட்டுள்ளார். விறுவிறுப்பிற்கு பஞ்சமில்ல்லாத களம் கிடைத்தும், கூறியதையே திரும்பத் திரும்பக் கூறி கடுப்பேற்றியுள்ளனர். மேக்கிங்கில் காட்டிய அக்கறையை ரைட்டிங்கில் காட்டியிருந்தால், கிங்ஸ்டன் சம்பவம் செய்திருப்பான். தற்போது அவனே சம்பவமாகிவிட்டான்
2.25/5

actor G. V. Prakash KumarActress Divyabharathidirector Kamal PrakashKingston movie