நேர்மையும் சாமர்த்தியமும் ஒரு ஊடகக்காரனுக்கு முக்கியம் என்று சொல்லிவிட்டு, கதையில் நேர்மையும் இல்லாமல் திரைக்கதையில் சாமர்த்தியமும் இல்லாமல் வந்து நிற்கிறான் இந்த மாறன்..ஹீரோவிற்கு மதிமாறன் என்ற பாசிட்டிவ் பெயர் வைத்தவர்கள் ப்ளுசட்டை மாறன் ரேஞ்சிற்கு படத்தை கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள். நேர்மையயான பத்திரிகையாளராக இருக்கும் தனுஷுக்கு அந்த நேர்மையாலே சிக்கல் வருகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டார் என்பதே மாறன் கதை
தனுஷ் ஆக்ஷன் செண்டிமெண்ட் காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் அவரிடம் ஓர் அசால்ட் தன்மை தெரிகிறது. மேலும் இப்படத்திற்காக அவர் மெனக்கெடவே இல்லை என்பதும் புரிகிறது. மாளவிகா மோகனன் ஒரு காட்சியில் மட்டுமே கவனம் ஈர்க்கிறார். அமிர் கேரக்டர் ஓர் எதிர்பார்ப்பை கொடுத்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..ஸ்ரும்தி வெங்கட் நன்றாக நடித்துள்ளார். அவரது கேரக்டர் மட்டுமே ஆழமாக எழுதப்பட்டுள்ளது. வில்லனாக வரும் சமுத்திரக்கனி எதோ அடுத்த ஷுட்டிங்க்கு போக ப்ளைட் பிடிக்க வேண்டிய அவசரத்திலே நடித்திருப்பார் போல
பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே குறை சொல்ல முடியாத ரகம் தான். ஆனால் கதையில் இல்லாத மாஸ் இசையில் இருந்து என்ன பயன்? ஒளிப்பதிவும் ஓ.கே ரகம் சிறிய நடிகர்களை வைத்து பெரிதாக கதை செய்யும் இயக்குநர்கள் பெரிய ஹீரோக்கள் கிடைத்ததும் கதையில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்..கார்த்திக் நரேன் அதற்கு இரண்டு படங்கள் மூலமாக நேரடி உதாரணமாகி விட்டார்!
மாறன் அவசியம் மாறணும்
2/5