பட்டாம்பூச்சி- விமர்சனம்

சைக்கோ கொலைகாரன் நிரபராதி ஆவதை ஒரு போலீஸ் தடுத்து நிறுத்த போராடும் கதையே பட்டாம்பூச்சி

விடிந்தால் தூக்கு என்ற நிலையில் இருக்கும் ஜெய், தன் கடைசி ஆசையாக ஓர் பெண் பத்திரிகையாளரைச் சந்திக்கவேண்டும் என்கிறார். அந்தப் பத்திரிகையாளர் நாயகி அனிரோஸ். அவரிடம் ஜெய், தான் இப்போது எந்தக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளேனோ அந்தக் கொலையைச் செய்யவில்லை. ஆனால் வேறு 7 கொலைகளைச் செய்திருக்கிறேன் என்கிறார். ஆனால் தக்க சாட்சி இல்லாததால் காவல்துறையும் நீதித்துறையும் ஆட்ட்ம் காண ஜெய் வெளியே வருகிறார். அவரை மறுபடியும் உள்ளே தள்ள சுந்தர் சி முயற்சிக்க . பட்டாம் பூச்சியின் ஆட்டம் ஸ்டார்ட்

சைக்கோ கொலைகாரனாக ஜெய் ஓரளவு நன்றாகவே நடித்திருக்கிறார். சுந்தர் சி படமெங்கும் டல்லடிக்கிறார். அனிரோஸ் நடிப்பு பரவாயில்லை.

படத்தில் கேமரா மேன் நன்றாக உழைத்துள்ளார். பின்னணி இசை அடிக்கும் அடியால் காது ஜிவ் என்கிறது. எடிட்டரின் கட்ஸ் ஒருசில இடங்களில் மட்டும் கட்ஸாக இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் 1980-களை கண்களில் காட்ட போராடியிருக்கிறார்

படத்தில் நிறைய வன்முறை. கொலைகளை எல்லாம் இவ்வளவு இன்டன்ஸாக காட்ட வேண்டுமா இயக்குநரே? தவறான சூழலில் வளரும் ஒருவன் இப்படி சைக்கோ ஆகிவிட்டான் என்ற க்ளாரிபிகேஷன் எல்லாம் எரிச்சலைத் தான் தருகிறது. இந்தப்படத்தால் சமூகத்திற்கோ. தயாரிப்பாளருக்கோ, துளியும் லாபமாக இருக்கிறதா என்று கேட்டால்…சிறகொடிந்த பட்டாம் பூச்சி எப்படி பதில் சொல்லும்?

1.5/5

Actor JaiActor SundarCActress Honey Rosedirector BadriNarayananpattampoochi movie