அன்பே டயனா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குநரும் நடிகரும் பாரி இளவழகன் என்பதால் அன்பே டயனா படம் மீது எதிர்பார்ப்பு அதிகம்? பூர்த்தி செய்துள்ளாரா பாரி?

பெரம்பூர் தொகுதியின் ஒரு பகுதியில் கண்டிப்புடன் கூடிய ரோஜாவுக்கு மகனான ஹீரோ பாரி இளவழகன் எட்டு ஆண்டுகளாக ஆங்கிலோ இண்டியன் கேர்ள்-ஆன ரம்யா ரங்கநாதனை காதலித்து வருகிறார். ஆனால் ரோஜா தான் சார்ந்த சாதிப்பெண்ணை தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். பாரிக்கு காதலா அம்மாவா? என்ற குழப்பத்தோடு இன்னொரு குழப்பமும் வருகிறது. அது ரம்யா ரங்கநாதன் நம் குடும்பத்திற்கு செட்டாவாரா..இல்லையா? என்பது. ஆக மேற்கண்ட பிரச்சினைகள் எப்படி சால்வ் ஆகிறது என்பது படத்தின் மீதிக்கதை

பாரி இளவழகன் கேரக்டர்க்கேற்ற நடிப்பைக் கச்சிதமாக கொடுத்துள்ளார். அவரின் இயல்பான தோற்றமும் எதார்த்தமான நடிப்பும் நம்மை கவர்கிறது. ரம்யா ரங்கநாதன் அசத்தலான நடிப்பைக் கொடுத்துள்ளார். எமோஷ்னல், காமெடி அழக என பெரிய மேஜிக் நிகழ்த்துகிறார். சேத்தன் அதிரிபுதிரி பெர்பாமன்ஸால் பல காட்சிகளை காப்பாற்றுகிறார். ரோஜா சாதிப்பெருமையும் தூக்கிப்பிடிக்கும் போது, அதை தவறென்று உணர்ந்து உடையும் போதும் கவர்கிறார். பரிதாபங்கள் கோபி ஒகே. அந்த மாடுலேசன் மட்டும் இரிட்டேட்டிங் ப்ரோ

ஷெல்லி காலிஸ்ட் தனது ஒளிப்பதிவை திறம்பட கையாண்டுள்ளார். பரத் சங்கர் இசையில் பாடல்கள் அனைத்துமே கதையோடு பயணிக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு

இந்தக் கதைக்கு 2.30 மணி நேர லென்த் தேவையேயில்லை. இயக்குநர் பாரியை நடிகர் பாரி இந்த இடத்தில் தடுத்துவிட்டார் போல. மேலும் ஹீரோவின் கேரக்டர்டேசன் அவ்வப்போது மாறுவதும் நமக்கு நெருடலைத் தருகிறது. க்ளைமாக்ஸில் வரும் 15 நிமிட காமெடி காட்சிகள் மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது
2.75/5