‘டார்ச்சர் தாங்க முடியல…’ – விஜய் டிவியிலிருந்து வெளியேறிய தொகுப்பாளினி ஜாக்குலின்!

Get real time updates directly on you device, subscribe now.

Jacqueline

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தொகுப்பாளினி ஜாக்குலின்.

பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என்றிருக்கும் இவர் அதே சேனல் நடத்துகிற மற்ற நிகழ்ச்சிகளையும் சக தொகுப்பாளர்களோடு தொகுத்து வழங்குவார். சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கு பெறுவார்.

அப்படி விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருந்த ஜாக்குலின் திடீரென்று அந்த டிவியிலிருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதற்கு காரணம், இரண்டு நிகழ்ச்சிகளில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தான் என்கிறார்கள். சமீபத்தில் ஜெகன் நடத்துகிற நிகழ்ச்சி ஒன்றை அவரோடு சேர்ந்து தொகுத்து வழங்கிய போது அவரை ‘டபுள் மீனிங்’கில் பேசி செம கலாய் கலாய்த்தாராம் ஜெகன்.

Related Posts
1 of 5

அதேபோல நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜான் விஜய், ஜாக்குலினை தொட்டு டான்ஸ் ஆடியிருக்கிறார், ஆனால் ஜாக்குலினோ தன்னை தொடாமால் ஆடுமாறு ஜான் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்.

மேடையிலேயே ஜாக்குலின் தன்னை அப்படிச் சொன்னதால் அவமானப்பட்டதாக நினைத்த ஜான் விஜய் ஜாக்குலினைப் பற்றி டிவி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

இப்படி தொடரந்து மனம் புண்படும்படியான நிகழ்வுகள் நடந்ததால் விஜய் டிவியை விட்டு வெளியேறும் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கம் அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சேனலிலிருந்து வெளியேறி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

கால்ல தண்ணி படாம எப்படிம்மா குளத்துக்குள்ள இறங்க முடியும்?